இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் PANKHUDI வலை தளத்தினைத் தொடங்கி வைத்தார்.
இந்த வலை தளமானது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு முன்னெடுப்புகளில் ஒருங்கிணைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பங்குதாரர்களின் பங்களிப்பை மேம்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும்.
இது ஊட்டச்சத்து, சுகாதாரம், குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி, குழந்தைகள் நலன் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் போன்ற முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது.
இந்த வலை தளம் சுமார் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், 5,000 குழந்தைப் பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் கிட்டத்தட்ட 800 ஒற்றைத் தீர்வு மையங்கள் மூலம் சேவைகளை வலுப்படுத்தும்.