TNPSC Thervupettagam

PARAKH RS 2025 மதிப்பீடு

July 14 , 2025 9 days 79 0
  • ஒரு முழுமையான மேம்பாட்டிற்கான அறிவு சார் செயல்திறன் மதிப்பீடு, மதிப்பாய்வு மற்றும் பகுப்பாய்வு - இராஷ்ட்ரிய சர்வேக்சன் (PARAKH RS) எனும் கணக்கெடுப்பானது, முன்னர் தேசிய சாதனை கணக்கெடுப்பு (NAS) என்று அழைக்கப்பட்டது.
  • PARAKH RS ஆனது பின்வரும் பாடங்களில் செயல்திறனை மதிப்பிட்டது:
    • மொழி மற்றும் கணிதம் (வகுப்பு 3, 6 மற்றும் 9),
    • நம்மைச் சுற்றியுள்ள உலகம் (வகுப்பு 3 மற்றும் 6), மற்றும்
    • அறிவியல் மற்றும் சமூக அறிவியல் (வகுப்பு 9).
  • பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை 3 ஆம் வகுப்பில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக உருவெடுத்தன.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சாஹேப்கஞ்ச் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசி மற்றும் ரஜோரி ஆகியவை குறைந்த செயல்திறன் கொண்ட மாவட்டங்கள் ஆகும்.
  • கேரளா, பஞ்சாப் மற்றும் தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகியவை 6 ஆம் வகுப்பில் சிறந்த செயல்திறன் கொண்டவையாகும்.
  • பஞ்சாப், கேரளா மற்றும் சண்டிகர் ஆகியவை 9 ஆம் வகுப்பில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாகும்.
  • கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 3 ஆம் வகுப்பில் கணிதத்தில் மிகக் குறைந்த செயல்திறன் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்