இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆனது, கடந்தகால இடர் மற்றும் வருவாய் சரிபார்ப்பு நிறுவனம் (ParRVA) என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கி உள்ளது.
இடர் மற்றும் வருவாய் தரவைச் சரிபார்ப்பதன் மூலம் முதலீட்டுத் தயாரிப்புகளின் முறையற்ற விற்பனையை நிறுத்துவதை PaRRVA நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேற்பார்வையை மேம்படுத்த இந்த அமைப்பு டிஜிட்டல் தணிக்கை சோதனைகள் மற்றும் தரப்படுத்தப்பட்ட அறிக்கையிடலைப் பயன்படுத்துகிறது.
நிதிச் சேவைகளின் சரிபார்க்கப்பட்ட செயல்திறன் பதிவுகளுக்கான அணுகலை முதலீட்டாளர்களுக்கு ParRVA வழங்கும் என்று SEBI கூறியது.
அங்கீகரிக்கப்படாத ஆலோசனைகளை வழங்கும் பதிவு செய்யப்படாத நிதித் தகவல் வழங்குநர்களுக்கு எதிரான நடவடிக்கையையும் தற்போது ஒழுங்குமுறை ஆணையம் அதிகரித்து வருகிறது.