இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), கடந்தகால அபாயம் மற்றும் வருவாயைச் சரிபார்க்கும் முகமையை (PaRRVA) செயல்பாட்டிற்குக் கொண்டு வந்து உள்ளது.
இது நிதிச் சந்தை நிறுவனங்களின் கடந்தகால அபாயம் மற்றும் வருவாய் குறித்த தரவுகளைச் சரிபார்க்கிறது.
CARE Ratings நிறுவனமானது PaRRVA-வாக நியமிக்கப்பட்டுள்ளது, மேலும் தேசிய பங்குச் சந்தை (NSE) PaRRVA தரவு மையமாகச் (PDC) செயல்படுகிறது.
இது முதலீட்டு ஆலோசகர்கள், ஆராய்ச்சிச் சேவைகள் மற்றும் நெறிமுறை சார்ந்த வர்த்தகச் செயல்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.
இது SEBI விதிமுறைகளின்படி விளம்பரங்களில் சரி பார்க்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
இது நிதிச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, தவறான வழிகாட்டும் உரிமைகோரல்களைக் குறைக்கிறது.