TNPSC Thervupettagam

PASSEX – இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைப் பயிற்சி

September 26 , 2020 1789 days 747 0
  • இந்தியக் கடற்படையானது கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் ராயல் ஆஸ்திரேலியக் கடற்படையுடன் ஒரு தொடர் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.  
  • இந்தக் கடற்படைப் பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த எச்எம்ஏஎஸ் ஹோபார்ட் மற்றும் இந்தியக் கடற்படைக் கப்பல்களான சஹாயத்ரி மற்றும் கர்முக் ஆகியவை பங்கு பெறவுள்ளன.
  • இந்தத் தொடர் பயிற்சியானது இரு நாடுகளிலும் இணைந்து செயலாற்றும் தன்மையை மேம்படுத்துதல், புரிந்துணர்வை மேம்படுத்தல், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்குப் பிறகு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியக் கடற்படையால் நடத்தப்படும் 4வது பயிற்சி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்