TNPSC Thervupettagam
August 20 , 2025 17 hrs 0 min 33 0
  • ஹவாய் அருகே இதுவரை அறியப்பட்டவற்றிலேயே மிக நீளமான வால் கொண்ட ஒரு பெரிய வைரஸை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • PelV-1 என பெயரிடப்பட்ட இந்த வைரஸ், வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள ALOHA நிலையத்தில் கண்டறியப்பட்டது.
  • PelV-1 ஓர் அரிய வைரஸ் ஒம்புயிரிக் குழுவான டைனோஃப்ளாஜெல்லேட்டுகளைப் பாதிக்கிறது.
  • 2.3 மைக்ரான் வரை நீளுகின்ற இதன் வால் பல பாக்டீரியாக்களை விட நீளமானதாகும்.
  • இந்த வால் 30 நானோமீட்டர் அகலமுடையது, மேலும் கேப்சிட்டை (புரத உறை) விட 10 மடங்கு நீளமானது.
  • படி எடுத்தலின் போது அல்லாமல், ஒம்புயிரி செல்களின் நகல் வெளியீட்டிற்குப் பிறகு தான் PelV-1 வைரசின் வால் உருவாகிறது.
  • இது மெசோமிமிவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
  • PelV-1 வைரசின் மரபணுவில் 459,000 அடிப்படை இணைகள் மற்றும் 467 மரபணுக்கள் உள்ளன.
  • ரோடாப்சினைக் கொண்டுள்ளதால், இது சூரிய ஒளியை ஆற்றலுக்காகப் பயன்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்