TNPSC Thervupettagam

PEN-Plus அணுகுமுறை

May 3 , 2025 18 days 43 0
  • PEN-Plus அணுகுமுறையை ஏற்றுக் கொண்டதிலிருந்து இருபது ஆப்பிரிக்க நாடுகள் ஆனது, கடந்த நான்கு ஆண்டுகளில் கடுமையான தொற்று அல்லாத நோய்களுக்கான (NCDs) சேவைகளுக்கான அணுகலை அதிகரித்துள்ளன.
  • 2019 ஆம் ஆண்டில் மட்டும், உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் 2.8 மில்லியனுக்கும் மிக அதிகமான NCD தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்ற நிலையில் இது ஒரு நாளைக்கு சுமார் 7,900க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்குச் சமமாகும்.
  • இந்தப் பிராந்தியத்தில், 2000 ஆம் ஆண்டில் சுமார் 8.7 மில்லியனாக பதிவான மொத்த உயிழப்புகளின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் 7.8 மில்லியனாகக் குறைந்து உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் அனைத்து உயிரிழப்புகளிலும் NCD தொடர்பான உயிரிழப்புகள் 37 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன் NCD தொடர்பான உயிரிழப்புகள் மட்டும் திடீரென அதிகரித்தன என்பதோடு இது 2000 ஆம் ஆண்டில் 24 சதவீதமாக இருந்தது.
  • ஓர் ஒருங்கிணைந்தச் சுகாதாரப் பராமரிப்பு விநியோக மாதிரியான PEN-Plus, முதலில் ருவாண்டாவில் தீவிர வறுமை நிலையில் வாழும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இந்நலச் சேவையினை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.
  • இது முதன்மையாக ஆரம்ப சுகாதார நலச் சேவை மட்டத்தில் மிகவும் பொதுவான NCD பாதிப்புகளை நிர்வகிப்பதில் ஒரு கவனம் செலுத்துகின்ற, உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய தொற்று அல்லாத நோய்த் தடுப்புத் திட்டங்களின் தொகுப்பிற்கு மிக இணையாக உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்