PESA திவாஸை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் இரண்டு நாட்கள் அளவிலான PESA (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கு பஞ்சாயத்து அமைப்புகளின் விரிவாக்கம்) மஹோத்சவம் நடைபெற்றது.
இந்த மஹோத்சவம் ஆனது பழங்குடியினச் சமூகங்களை மேம்படுத்துவதையும் அவர்களின் உரிமைகள் மற்றும் மரபுகளை அங்கீகரிப்பதை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பழங்குடியினரின் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதற்கும், பாதுகாப்பதற்கும் மற்றும் ஊக்குவிப்பதற்குமான ஒரு தேசிய தளத்தை வழங்குகிறது.
1993 ஆம் ஆண்டில், கிராமம், தொகுதி மற்றும் மாவட்ட மட்டங்களில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் அல்லது உள்ளூர் நிர்வாக அமைப்புகளை நிறுவுவதற்காக இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது (73 வது திருத்தம்).
ஆனால், 73வது திருத்தச் சட்டம் பழங்குடியினப் பட்டியலிடப்பட்டப் பகுதிகளுக்கு தானாகவே பொருந்தாது.
PESA சட்டம் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு விதிகளை பழங்குடியினர் அதிகம் காணப் படும் ஐந்தாவது அட்டவணை பகுதிகளுக்கு விரிவுபடுத்துகிறது.
1996 ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்தச் சட்டம் இந்தப் பகுதிகளில் உள்ள கிராம சபைகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு அவற்றின் பாரம்பரிய நிர்வாக முறைகளைப் பராமரிக்க கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.
தற்போது, 10 மாநிலங்களுக்கு ஐந்தாவது அட்டவணை சார் பகுதிகள் உள்ளன.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆனது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதியை PESA தினமாகக் கொண்டாடுகிறது.