நிரந்தரமாக கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பு அல்லது பெஸ்கோ அமைப்பின் (Permanent Structured Cooperation- PESCO)பாதுகாப்பு முன்னெடுப்பில் பங்கேற்பதற்காக நார்வே, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் விடுத்த கோரிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியமானது சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.
முதன்முறையாக ஐரோப்பிய மன்றமானது PESCO திட்டத்தில் பங்கேற்பதற்கு ஐரோப்பிய மன்றத்தைச் சாராத நாடுகளுக்கு அனுமதியினை வழங்கியுள்ளது.
தற்போது இந்த நாடுகள் ஐரோப்பாவின் இராணுவ இயக்கத் திட்டத்தில் பங்கேற்க இயலும்.
PESCO ஆனது ஐரோப்பிய ஒன்றியப் பாதுகாப்பு மற்றும் இராணுவக் கொள்கையின் ஒரு அங்கமாகும்.
இந்தக் கொள்கையானது 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட லிஸ்பன் ஒப்பந்தத்தினால் அறிமுகப் படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலானதாகும்.