April 9 , 2026
3 days
71
- தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள இந்தியாவின் PFBR (முன்மாதிரி வேக உற்பத்தி உலை/வேக ஈனுலை) செயல்பாட்டு நிலையை அடைந்தது.
- செயல்பாட்டு நிலை என்பது உலையில் ஒரு தன்னிலை பேணும் அணுக்கரு பிளவுத் தொடர்வினை தொடங்குவதைக் குறிக்கிறது.
- PFBR என்பது புளூட்டோனியம் எரிபொருளைப் பயன்படுத்தும் 500 மெகாவாட் மின் திறன் கொண்ட, சோடியம் மூலம் குளிரூட்டப்படும் வேக உற்பத்தி உலை/வேக ஈனுலையாகும்.
- இது கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (IGCAR), பாரதிய நபிகிய வித்யுத் நிகாம் லிமிடெட் (BHAVINI) மூலம் இயக்கப்படுகிறது.
- வேக உற்பத்தி உலைகள்/வேக ஈனுலைகள் அவை எடுத்துக் கொள்ளும் எரிபொருளை விட அதிக அளவிலான பிளவுறு எரிபொருளை உற்பத்தி செய்கின்றன.
- இது புளூட்டோனியம் மற்றும் பின்னர் தோரியத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைக் குறிக்கிறது.

Post Views:
71