TNPSC Thervupettagam

PHC உச்சிமாநாடு 2026

April 10 , 2026 2 days 57 0
  • நோய்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான சுகாதாரமான நகரங்களுக்கான கூட்டமைப்பு (PHC) உச்சி மாநாடு நடைபெற்றது.
  • 55 நகரங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற இந்த உச்சி மாநாடானது பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.  
  • PHC என்பது தொற்றாத நோய்கள் (NCDs) மற்றும் காயங்களைத் தடுப்பதற்காகப் பணியாற்றும் 74 நகரங்களின் கூட்டமைப்பாகும்.
  • இக்கூட்டமைப்பில் இந்தியாவின் மும்பை, அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
  • தொற்றாத நோய்கள் (NCDs) என்பவை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாத, நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களாகும்.
  • இதய நோய்கள், புற்றுநோய்கள், சுவாச நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை முக்கியத் தொற்றாத நோய்களாகக் கருதப்படுகின்றன.
  • உலகளாவிய இறப்புகளில் 80%க்கும் அதிகமானவை தொற்றாத நோய்கள் மற்றும் காயங்களாலேயே ஏற்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்