உலகின் மிகப்பெரிய நெகிழிப் பொருட்கள் கண்காட்சிகளில் ஒன்றான PLASTINDIA 2026, புது டெல்லியில் நடைபெறுகிறது.
புதிய தொழில்நுட்பங்களையும் சர்வதேச ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் அதே வேளையில், நெகிழி சார் புத்தாக்கம், நிலையான உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பதிப்பின் கருத்துரு "Bharat Next" என்பதாகும், இது தற்சார்பு பாரதம் மற்றும் வளர்ந்த பாரதம் ஆகிய தொலைநோக்குப் பார்வைகளை ஆதரிக்கிறது.
இந்தக் கண்காட்சி நான்கு முக்கிய தூண்களாக மனிதர்கள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றையும், வர்த்தகம், தொழில்நுட்பம், திறமை, பாரம்பரியம் மற்றும் சுற்றுலா ஆகிய ஐந்து மூலோபாயக் கூறுகளையும் மையமாகக் கொண்டுள்ளது.
முதல் முறையாக, இக்கண்காட்சியானது ஒரு கழிவுகளற்ற கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்படுகிறது என்பதோடு இதில் அனைத்து திடக் கழிவுகளும் பிரிக்கப்பட்டு, மறு சுழற்சி செய்யப்பட்டு, மீண்டும் பயன்படுத்தப்படும்.