TNPSC Thervupettagam

PLASTINDIA கண்காட்சி 2026

February 8 , 2026 9 days 71 0
  • உலகின் மிகப்பெரிய நெகிழிப் பொருட்கள் கண்காட்சிகளில் ஒன்றான PLASTINDIA 2026, புது டெல்லியில் நடைபெறுகிறது.
  • புதிய தொழில்நுட்பங்களையும் சர்வதேச ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் அதே வேளையில், நெகிழி சார் புத்தாக்கம், நிலையான உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பதிப்பின் கருத்துரு  "Bharat Next" என்பதாகும், இது தற்சார்பு பாரதம் மற்றும் வளர்ந்த பாரதம் ஆகிய தொலைநோக்குப் பார்வைகளை ஆதரிக்கிறது.
  • இந்தக் கண்காட்சி நான்கு முக்கிய தூண்களாக மனிதர்கள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றையும், வர்த்தகம், தொழில்நுட்பம், திறமை, பாரம்பரியம் மற்றும் சுற்றுலா ஆகிய ஐந்து மூலோபாயக் கூறுகளையும் மையமாகக் கொண்டுள்ளது.
  • முதல் முறையாக, இக்கண்காட்சியானது ஒரு கழிவுகளற்ற கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்படுகிறது என்பதோடு இதில் அனைத்து திடக் கழிவுகளும் பிரிக்கப்பட்டு, மறு சுழற்சி செய்யப்பட்டு, மீண்டும் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்