பிரதான் மந்திரி அனுசூசித் ஜதி அப்யுதய் யோஜனாவின் (PM-AJAY) கீழ், 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 நிலவரப்படி 18,093 கிராமங்கள் ஆதர்ஷ் கிராமங்களாக அறிவிக்கப் பட்டன.
பட்டியலிடப்பட்ட சாதியினரின் (SC) சமூக-பொருளாதார மற்றும் கல்வி நிலைகளை மேம்படுத்துவதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
46,944 மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டு, 47.79 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில், 47,200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதில் சேர்க்கப் பட்டு உள்ளன.
2021-22 முதல் 2025-26 ஆம் ஆண்டு வரை மானிய உதவியின் கீழ் மாநிலங்களுக்கு சுமார் ₹1,730 கோடி விடுவிக்கப்பட்டது, இதன் மூலம் 2.5 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கப்பட்டது.
இத்திட்டம் ஆதர்ஷ் கிராம் மேம்பாடு, சமூக-பொருளாதார திட்டங்களுக்கான மானிய உதவி, மற்றும் மாணவர் விடுதிகளின் கட்டுமானம் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.