பட்டியலிடப்பட்ட சாதியினரின் (SC) நலத்திட்ட அமலாக்கத்தை வலுப்படுத்தும் வகையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், புதுதில்லியில் PM-AJAY இணையதளம் மற்றும் AJAY அலைபேசிச் செயலியை அறிமுகப்படுத்தியது.
PM-AJAY என்பது பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா என்பதைக் குறிக்கிறது.
இந்த முன்னெடுப்பை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடங்கியது.
இந்த இணையதளம் மற்றும் அலைபேசிச் செயலியானது, திட்டத்தை காகித அடிப்படையிலான வேலைகளிலிருந்து முழுமையான டிஜிட்டல் பணிப்பாய்வு மற்றும் நிகழ்நேர செயலாக்க அமைப்புக்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அஜய் அலைபேசிச் செயலியானது கிராம அளவிலான திட்டமிடல், கள கண்காணிப்பு, புவிக் குறியிடுதல், புகைப்படம் பதிவேற்றுதல், டேஷ்போர்டு/கட்டுப்பாட்டுப் பலக அறிக்கை மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் நிர்வாகத்திற்கு துணைபுரியும்.
பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான (SC) நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல், வெளிப்படைத் தன்மை மற்றும் சேவை வழங்குதலை மேம்படுத்துவதற்காக இந்தத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது.