TNPSC Thervupettagam

PM AJAY - ஆதர்ஷ் கிராம மேம்பாடு

October 19 , 2026 6 days 107 0
  • பிரதான் மந்திரி அனுசூசித் ஜதி அப்யுதய் யோஜனாவின் (PM-AJAY) கீழ், 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 நிலவரப்படி 18,093 கிராமங்கள் ஆதர்ஷ் கிராமங்களாக அறிவிக்கப் பட்டன.
  • பட்டியலிடப்பட்ட சாதியினரின் (SC) சமூக-பொருளாதார மற்றும் கல்வி நிலைகளை மேம்படுத்துவதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • 46,944 மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டு, 47.79 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில், 47,200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதில் சேர்க்கப் பட்டு உள்ளன.
  • 2021-22 முதல் 2025-26 ஆம் ஆண்டு வரை மானிய உதவியின் கீழ் மாநிலங்களுக்கு சுமார் ₹1,730 கோடி விடுவிக்கப்பட்டது, இதன் மூலம் 2.5 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கப்பட்டது.
  • இத்திட்டம் ஆதர்ஷ் கிராம் மேம்பாடு, சமூக-பொருளாதார திட்டங்களுக்கான மானிய உதவி, மற்றும் மாணவர் விடுதிகளின் கட்டுமானம் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்