டெல்லி உயர் நீதிமன்றம் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளில் நிவாரண (PM CARES நிதி) நிதியானது 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தனியுரிமைக்கான உரிமையைக் கொண்டு உள்ளது.
தனியுரிமைப் பாதுகாப்புகள் நீதித்துறை அல்லது அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று அமர்வு குறிப்பிட்டது.
PM CARES வரி விலக்குகளை வெளியிடுவது தொடர்பான மத்திய தகவல் ஆணையத்தின் (CIC) உத்தரவை ரத்து செய்த ஒற்றை நீதிபதி அமர்வின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.
நன்கொடையாளர்கள், பங்களிப்புகள், வரி விலக்குகள் மற்றும் நிதியின் செலவுகள் பற்றிய விவரங்களைக் கோரிய CIC உத்தரவை வருமான வரித் துறை எதிர்த்து வழக்கு தொடுத்தது.
நீதிமன்றம் பிப்ரவரி 10, 2026 அன்று இம்மேல்முறையீட்டை தொடர்ந்து விசாரிக்கும் என்பதோடுமேலும் இறுதி முடிவு எட்டப்படும் வரை எந்த தகவலும் வெளியிடப்படாது.