TNPSC Thervupettagam

PM-DHARA திட்டம் – பசுமை ஆற்றல் பரிமாற்றம்

October 5 , 2026 11 hrs 0 min 30 0
  • மாநிலத்திற்கு இடையேயான மின் பரிமாற்ற அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக PM-DHARA (பிரதான் மந்திரி இணக்கமான மற்றும் விரைவுபடுத்தப்பட்ட புதுப்பிக்கத் தக்க ஆற்றல் அணுகலை உருவாக்குதல்) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2032–33 ஆம் நிதியாண்டிற்குள் 135 ஜிகாவாட் (GW) அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மின் கட்டமைப்புடன் இணைத்து பரிமாற்றம் செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாநிலத்திற்கு உள்ளேயான மின் பரிமாற்றக் கட்டணங்களை ஈடுசெய்யவும், மின்சாரக் கட்டணங்களைக் குறைவாக வைத்திருக்கவும் இத்திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி ஆதரவாக ₹54,082 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • மின்கட்டமைப்பின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை நிர்வகிக்கவும் 50 GWh திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) நிறுவப்படும்.
  • 2035 ஆம் ஆண்டிற்குள் 900 GW புதைபடிவமற்ற ஆற்றல் திறனை நிறுவுவதை இலக்காகக் கொண்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பு, ஆற்றல் சேமிப்பு, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் கார்பன் உமிழ்வைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு PM-தாரா திட்டம் ஆதரவளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்