பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi-PM-KISAN) திட்டத்தின் உள்ளடக்க வரம்பை முழுமையாக விரிவாக்கம் செய்ய மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முடிவினால், நிலங்களை வைத்திருக்கும் அனைத்து தகுதியான விவசாய குடும்பங்களும் (இது வழக்கமான விலக்களிப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டது) இத்திட்டத்தின் கீழ் பயனடைவர்.
பிரதான் மந்திரி சம்மான் நிதி
விவசாயிகளுக்கு வருமான ஆதரவு தரும் திட்டமான பிரதான் மந்திரி சம்மான் நிதியானது 2019 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டமானது பாதகமான வானிலை மற்றும் குறைவான விலைகள் வழங்கப்படுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடையே நிலவும் அமைதியின்மைக்கு தீர்வு காண்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் அரசானது விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாயை வழங்கும்.