பிரதம மந்திரி மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளிப் பிராந்தியங்கள் மற்றும் ஆடைப் பூங்காக்கள் திட்டம் (PM MITRA) குறித்த தேசிய மாநாடானது சமீபத்தில் நடைபெற்றது.
PM MITRA பூங்காக்கள் என்பவை நூற்பு, நெசவு, செயல்முறைக்குட்படுத்துதல் / சாயம் இடுதல் மற்றும் அச்சிடுதல் முதல் ஆடை உற்பத்தி வரை அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைந்த ஜவுளி மதிப்புத் தொடர் சங்கிலி அமைப்பினை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்கும்.
இந்தத் திட்டமானது ஒரு பூங்காவிற்கு வீதம் சுமார் 1 லட்சம் நேரடி மற்றும் 2 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.