நாடு முழுவதும் 7 புதிய மிகப்பெரிய (மெகா) ஜவுளிப் பூங்காக்களை (அ) PM MITRA பூங்காக்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது பொருளாதாரத்தில் ஜவுளித் துறையின் வளர்ச்சியை மேலும் உயர்த்துவதில் உதவுவதற்கும், உலக ஜவுளித்துறை வரைபடத்தில் இந்தியாவினை வலுவாக நிலை நிறுத்துவதற்குமான ஒரு முயற்சியாகும்.
இந்த மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பிராந்திய மற்றும் ஆடைப் பூங்காக்கள் என்பவை மதிப்பிற்குரிய பிரதமரின் 5F என்ற குறிக்கோளின் அடிப்படையில் அமைக்கப்பட உள்ளது.
‘5F’ சூத்திரமானது வேளாண்மையிலிருந்து இழை; இழையிலிருந்துத் தொழிற்சாலை; தொழிற்சாலையிலிருந்து ஆடை வடிவமைப்பு; ஆடை வடிவமைப்பில் இருந்து வெளிநாடு ஆகியவற்றைக் கொண்டதாகும்.
இந்தப் பூங்காக்கள் வெவ்வேறு மாநிலங்களிலிலுள்ள பசுமை நிலம் மற்றும் தொழில்துறை சார்ந்த நிலங்களில் அமைக்கப்படும்.
இவை பொது-தனியார் கூட்டிணைவு முறையில் உரிமை கோரப்படும்.