இந்தியா அரசானது PM RAHAT (சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தல் மற்றும் கட்டாய சிகிச்சை அளித்தல்) திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
இந்தத் திட்டம், விபத்து நடந்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு சாலை விபத்தில் பாதிக்கப் பட்டவருக்கு ₹1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சையை வழங்குகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அருகில் இருப்பவர்கள் ERSS (அவசரகாலப் பதில் ஆதரவு அமைப்பு) 112 என்ற எண்ணிற்கு அழைத்து செய்து ஒரு மணி நேரத்திற்குள் (கோல்டன் ஹவர்) அருகிலுள்ள நியமிக்கப்பட்ட மருத்துவமனையை அடையலாம்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் eDAR (மின்னணு வழி விரிவான விபத்து அறிக்கை) தளம் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் TMS (பரிவர்த்தனை மேலாண்மை அமைப்பு) 2.0 ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.