PM SVANidhi திட்டத்தினை 2030 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கவும் அதனை மறுசீரமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தத் திட்டம் ஆனது ஆரம்பத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.
இது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதிச் சேவைகள் துறையால் கூட்டாக செயல்படுத்தப்படும்.
புதிய கட்டமைப்பின் கீழ், முதல் கடன் தவணையானது 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தவணை 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது தவணை 50,000 ரூபாயாக உள்ளது.
திட்டத்தின் அமலாக்க பரவல் சட்டப்பூர்வ நகரங்களுக்கு அப்பால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பல்வேறு நலத்திட்டங்களுடன் இணைக்க மாதாந்திர லோக் கல்யாண் மேளாக்கள் நடத்தப்படும்.
COVID-19 தொற்றுநோய் காலத்தில், 2020 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதியன்று PM SWANidhi திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 68 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனை செய்யும் நபர்களுக்கு 13,797 கோடி ரூபாய் மதிப்புள்ள 96 லட்சத்திற்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருது (2023) மற்றும் எண்ணிம மாற்றத்திற்கான வெள்ளி விருது (2022) ஆகியவற்றைப் பெற்று உள்ளது.