இந்தியாவின் முதன்மைப் பயிர்க் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டமானது 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
PMFBY மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை சார்ந்தப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியத் திட்டங்களின் கீழ் இந்தியா முழுவதும் கோரப்பட்ட அனைத்து இழப்பீடுகளிலும் 97 சதவீதம் வழங்கப்பட்டுள்ளதாகத் தரவு காட்டுகிறது.
கோவா, சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகியவை இத்திட்டங்களின் கீழ் முழுமையான இழப்பீடு வழங்கலை எட்டியுள்ளன.
இதற்கு நேர்மாறாக, திரிபுரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகியவை பின்தங்கிய நிலையில் உள்ளன.
அவற்றின் இழப்பீட்டு வழங்கீடு விகிதங்கள் 91 சதவீதம் முதல் 51 சதவீதம் வரை உள்ளன.
இதில் விவசாயிகள் இன்னும் சுமார் 1,842 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பீடுகளைப் பெறுவதற்குக் காத்திருப்பதால், பயிர்க் காப்பீட்டு வழங்கீடுகளில் மிகவும் அதிகப் பற்றாக்குறை உள்ள மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.