பிரதம மந்திரியின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டமானது (PMFME), ₹20,300 கோடிக்கும் மேலான முதலீட்டு ஆதரவுடன் 2 இலட்சம் கடன்-இணைக்கப்பட்ட பயனாளிகளைக் கடந்து மைல்கல்லை எட்டியுள்ளது.
குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தவும் அவற்றின் போட்டித் தன்மையை மேம்படுத்தவும் தற்சார்பு இந்தியா (ஆத்மநிர்பார் பாரத்) அபியான் திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இது உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தால் (MoFPI) ₹10,000 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும்.
இத்திட்டமானது தகுதியான திட்டச் செலவுகளில் 35% கடன்-இணைக்கப்பட்ட மானியத்தை வழங்குகிறது என்பதோடு நிறுவனங்களை மேம்படுத்த அல்லது அமைக்க ஒரு அலகிற்கு அதிகபட்சமாக ₹10 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
இதன் பயனாளிகளில் சுமார் 90% பேர் முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆவர், அதே சமயம் 44% பேர் பெண் தொழில்முனைவோர்கள் ஆவர்.