TNPSC Thervupettagam

PMFME திட்டம் - 2 இலட்சம் பயனாளிகள் மைல்கல்

July 20 , 2026 7 days 97 0
  • பிரதம மந்திரியின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டமானது (PMFME), ₹20,300 கோடிக்கும் மேலான முதலீட்டு ஆதரவுடன் 2 இலட்சம் கடன்-இணைக்கப்பட்ட பயனாளிகளைக் கடந்து மைல்கல்லை எட்டியுள்ளது.
  • குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தவும் அவற்றின் போட்டித் தன்மையை மேம்படுத்தவும் தற்சார்பு இந்தியா (ஆத்மநிர்பார் பாரத்) அபியான் திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • இது உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தால் (MoFPI) ₹10,000 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும்.
  • இத்திட்டமானது தகுதியான திட்டச் செலவுகளில் 35% கடன்-இணைக்கப்பட்ட மானியத்தை வழங்குகிறது என்பதோடு நிறுவனங்களை மேம்படுத்த அல்லது அமைக்க ஒரு அலகிற்கு அதிகபட்சமாக ₹10 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
  • இதன் பயனாளிகளில் சுமார் 90% பேர் முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆவர், அதே சமயம் 44% பேர் பெண் தொழில்முனைவோர்கள் ஆவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்