TNPSC Thervupettagam

PMGSY திட்டத்தின் கீழ் மிக அதிகத் தொலைவு கொண்ட சாலை வசதி – ஜம்மு காஷ்மீர்

November 26 , 2019 1997 days 713 0
  • இந்த ஆண்டில் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது பிரதான் மந்திரி கிராமீன் சதக் யோஜனா (Pradhan Mantri Grameen Sadak Yojana - PMGSY) என்ற திட்டத்தின் கீழ் நாட்டில் மிக அதிகத் தொலைவு கொண்ட சாலை வசதிகளை ஏற்படுத்தி சாதனை படைத்து இருக்கின்றது.
  • இப்பகுதியானது இதுவரையில் 1,838 வாழ்விடங்களை உள்ளடக்கிய 11,400 கிலோ மீட்டர் சாலை வசதியைக் கொண்டிருக்கின்றது.
  • PMGSY என்பது நாட்டில் சாலை வசதியால் இணைக்கப்படாத கிராமங்களுக்கு சிறந்த, அனைத்து வானிலைகளையும் தாங்கக் கூடிய சாலை இணைப்பை வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
  • இது 2000 ஆம் ஆண்டில் அப்போதையப் பிரதமரான ஏபி வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்