PMGSY திட்டத்தின் கீழ் மிக அதிகத் தொலைவு கொண்ட சாலை வசதி – ஜம்மு காஷ்மீர்
November 26 , 2019 2087 days 747 0
இந்த ஆண்டில் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது பிரதான் மந்திரி கிராமீன் சதக் யோஜனா (Pradhan Mantri Grameen Sadak Yojana - PMGSY) என்ற திட்டத்தின் கீழ் நாட்டில் மிக அதிகத் தொலைவு கொண்ட சாலை வசதிகளை ஏற்படுத்தி சாதனை படைத்து இருக்கின்றது.
இப்பகுதியானது இதுவரையில் 1,838 வாழ்விடங்களை உள்ளடக்கிய 11,400 கிலோ மீட்டர் சாலை வசதியைக் கொண்டிருக்கின்றது.
PMGSY என்பது நாட்டில் சாலை வசதியால் இணைக்கப்படாத கிராமங்களுக்கு சிறந்த, அனைத்து வானிலைகளையும் தாங்கக் கூடிய சாலை இணைப்பை வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
இது 2000 ஆம் ஆண்டில் அப்போதையப் பிரதமரான ஏபி வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது.