பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா-III (PMGSY-III) திட்டத்தை 2028 ஆம் ஆண்டு மார்ச் வரை மத்திய அமைச்சரவை நீட்டித்துள்ளது.
கிராமப்புறங்களில் அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற சாலைகளை அமைத்து மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புற இணைப்பை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறந்த அணுகல் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக இது கிராமங்களை கிராமிய வேளாண் சந்தைகள் (GrAMs), பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைக்கிறது.
PMGSY-III திட்டத்தின் திருத்தப்பட்ட மொத்த ஒதுக்கீடு ₹83,977 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது.
மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் தடையற்ற இணைப்பை உறுதி செய்வதற்காக 161 நீண்ட தூர பாலங்கள் கட்டுவதும் இதில் அடங்கும்.
இணைப்பு இல்லாத கிராமப்புறக் குடியிருப்புகளுக்கு அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற சாலை வசதியை வழங்குவதற்காக 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் PMGSY தொடங்கப்பட்டது.
PMGSY-III திட்டம் புதிய சாலைகளை உருவாக்குவதை மட்டும் அல்லாமல், தற்போதுள்ள கிராமப்புற சாலைகள் மற்றும் முக்கிய இணைப்புப் பாதைகளை மேம்படுத்துவதில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது.