TNPSC Thervupettagam

PMGSY திட்டத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு

December 29 , 2025 2 days 92 0
  • பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) திட்டமானது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 25 ஆம் ஆண்டினை நிறைவு செய்தது.
  • இது முன்னர் போக்குவரத்து சேவை இணைப்பு இல்லாத கிராமப்புறக் குடியிருப்புகளுக்கு அனைத்து வானிலையிலும் செயல்படும் வகையிலான சாலை இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மத்திய நிதியுதவி திட்டம் ஆகும்.
  • PMGSY திட்டமானது, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளான 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டம் இந்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் (MoRD) செயல்படுத்தப்படுகிறது.
  • PMGSY நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளது:
    • PMGSY-I: போக்குவரத்து சேவை இணைப்பு இல்லாத குடியிருப்புப் பகுதிகளுக்கான பொது இணைப்பு.
    • PMGSY-II: தற்போதுள்ள கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்துதல்.
    • PMGSY-III: சந்தைகள், பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகளை இணைத்தல்.
    • PMGSY-IV (2024–29): 62,500 கி.மீ சாலைகள் வழியாக 25,000 குடியிருப்புப் பகுதிகளை இணைப்பதை இலக்காகக் கொண்டது.
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கிட்டத்தட்ட 95% நிறைவு செய்யப்பட்டதுடன், 8.25 லட்சம் கி.மீ.க்கும் அதிகமான சாலைகள் இதில் அனுமதிக்கப்பட்டன.
  • OMMAS, e-MARG, GPS கண்காணிப்பு மற்றும் புவியிடத் தகவல் கொண்ட ஆய்வுகள் ஆகியவை உட்பட தொழில்நுட்பம் சார்ந்த கண்காணிப்புகள் இதில் பயன்படுத்தப் படுகின்றன.
  • மூன்று அடுக்கு தரக் கண்காணிப்பு அமைப்பு இச்சாலையின் நீடிப்புக் காலம் மற்றும் தரநிலைகளை உறுதி செய்கிறது.
  • நிலையான கட்டுமானத்தில் நெகிழிக் கழிவு, எரி சாம்பல் மற்றும் உயிரி நிலக்கீல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் அடங்கும்.
  • PMGSY ஆனது கிராமப்புறங்களில் சந்தை அணுகல், வேளாண்-சந்தை இணைப்புகள், கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி சேவைகளை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்