TNPSC Thervupettagam

PMJJBY, PMSBY மற்றும் APY ஆகிய திட்டங்களின் 7 ஆம் ஆண்டு நிறைவு

May 13 , 2022 1151 days 552 0
  • சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதான் மந்திரி சுரக்ச பீமா யோஜனா (PMSBY) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APY) ஆகியவை தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
  • இந்த மூன்று திட்டங்களும் 2015 ஆம் ஆண்டு மே 09 அன்று கொல்கத்தா நகரில் பிரதமர் அவர்களால் தொடங்கப்பட்டது.
  • பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஆகும்.
  • இது இறப்பவர்களுக்கு எந்தவொருக் காரணத்திற்காகவும் வேண்டி காப்பீட்டுப் பயன்களை வழங்குகிறது.
  • 18 முதல் 50 வயதிற்குட்பட்ட, வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது தபால் அலுவலகக் கணக்கு வைத்திருக்கும் எந்தவொருத் தனிநபரும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய தகுதியுடையவர்கள் ஆவர்.
  • பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா என்பது ஒரு விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும்.
  • இது விபத்தினால் ஏற்படும் இறப்பு அல்லது உடல் உறுப்பு இழப்பிற்குக் காப்பீட்டு வசதியினை வழங்குகிறது.
  • 18 முதல் 70 வயதிற்குட்பட்ட, வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது தபால் அலுவலகக் கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு தனிநபரும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய தகுதியுடையவர்கள் ஆவர்.
  • அடல் பென்ஷன் யோஜனா என்பது அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கச் செய்வதற்கான அரசாங்கத்தின் ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.
  • 18 முதல் 40 வயதிற்குட்பட்ட, வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைத்து நபர்களும் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்ய தகுதியுடையவர்கள் ஆவர்.
  • தேர்ந்தெடுக்கப்படும் ஓய்வூதியத் தொகையின் அடிப்படையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கான பங்களிப்புகள் வேறுபடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்