PMJJBY, PMSBY மற்றும் APY ஆகிய திட்டங்களின் 7 ஆம் ஆண்டு நிறைவு
May 13 , 2022 1151 days 553 0
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதான் மந்திரி சுரக்ச பீமா யோஜனா (PMSBY) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APY) ஆகியவை தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த மூன்று திட்டங்களும் 2015 ஆம் ஆண்டு மே 09 அன்று கொல்கத்தா நகரில் பிரதமர் அவர்களால் தொடங்கப்பட்டது.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஆகும்.
இது இறப்பவர்களுக்கு எந்தவொருக் காரணத்திற்காகவும் வேண்டி காப்பீட்டுப் பயன்களை வழங்குகிறது.
18 முதல் 50 வயதிற்குட்பட்ட, வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது தபால் அலுவலகக் கணக்கு வைத்திருக்கும் எந்தவொருத் தனிநபரும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய தகுதியுடையவர்கள் ஆவர்.
பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா என்பது ஒரு விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும்.
இது விபத்தினால் ஏற்படும் இறப்பு அல்லது உடல் உறுப்பு இழப்பிற்குக் காப்பீட்டு வசதியினை வழங்குகிறது.
18 முதல் 70 வயதிற்குட்பட்ட, வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது தபால் அலுவலகக் கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு தனிநபரும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய தகுதியுடையவர்கள் ஆவர்.
அடல் பென்ஷன் யோஜனா என்பது அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கச் செய்வதற்கான அரசாங்கத்தின் ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.
18 முதல் 40 வயதிற்குட்பட்ட, வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைத்து நபர்களும் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்ய தகுதியுடையவர்கள் ஆவர்.
தேர்ந்தெடுக்கப்படும் ஓய்வூதியத் தொகையின் அடிப்படையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கான பங்களிப்புகள் வேறுபடுகின்றன.