PMKSY திட்டமானது 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு
February 11 , 2022 1612 days 883 0
‘பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY)’ திட்டமானது 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தினால் நிர்வகிக்கப் படுகிறது.
இந்தத் திட்டமானது உணவு பதப்படுத்தும் தொழில்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய அரசானது, 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில், SAMPADA திட்டத்தினை (வேளாண் & கடல்சார் உற்பத்திப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல் தொழில்துறைத் தொகுதியின் மேம்பாட்டுக்கான ஒரு திட்டம்) தொடங்கியது.
இந்தத் திட்டமானது 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா என மறுபெயரிடப்பட்டது.