நிதி அமைச்சகம் ஆனது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 66வது சட்டப் பிரிவின் கீழ் I4C அமைப்பினையும் சேர்த்தது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்க இயக்குநரகத்திலிருந்து முக்கியத் தகவல்களைப் பகிரவும் பெறவும் இந்திய இணையவெளிக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திற்கு (I4C) இது அங்கீகாரம் அளித்தது.
இது அமலாக்க இயக்குநரகம் மற்றும் பிற சட்ட அமலாக்க நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பகிரவும் பெறவும் I4C மையத்திற்கு உதவும்.
இது இணையவெளி மோசடிகளுக்குப் பின்னால் உள்ள முதன்மைச் சூத்திரதாரிகளை அடையாளம் காண உதவும்.