பிரதான் மந்திரி இராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) என்பது 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு தேசிய விருதாகும்.
PMRBP ஆனது வீரம், சமூக சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, கலை & கலாச்சாரம் மற்றும் அறிவியல் & தொழில்நுட்பம் ஆகியவற்றில் மகத்தான சாதனைகளுக்காக வழங்கப் படுகிறது.
2025 ஆம் ஆண்டில், 18 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த 20 குழந்தைகள் இந்த விருதைப் பெற்றனர் என்பதோடு இந்த விருதுகள் புது டெல்லியில் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
14 வயதான இந்திய கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, உள்நாட்டுப் போட்டி, 19 வயதுக்குட்பட்டோர் (U-19) மற்றும் இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகளில் தனது சாதனைகளுக்காக விளையாட்டுப் பிரிவில் இந்த விருதைப் பெற்றார்.
லிஸ்ட் A கிரிக்கெட் (விஜய் ஹசாரே கோப்பை), சையத் முஷ்டக் அலி கோப்பை (T20) மற்றும் இந்திய பிரீமியர் லீக் (IPL) ஆகியவற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
வீரதீரச் செயல்களுக்காக வயோமா பிரியா (தமிழ்நாடு) மற்றும் கமலேஷ் குமார் (பீகார்), கலை மற்றும் கலாச்சாரத்திற்காக எஸ்தர் லால்துஹவ்மி ஹனாம்தே (மிசோரம்), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்காக அர்னவ் அனுப்ரியா மகர்ஷி (மகாராஷ்டிரா), விளையாட்டுப் பிரிவிற்காக வைபவ் சூரியவன்ஷி (பீகார்) ஆகியோர் விருது பெற்றனர்.
ஆண்டுதோறும் அதிகபட்சமாக 25 விருதுகள் இதில் வழங்கப்படுகின்றன என்பதோடுஒவ்வொன்றும் ஒரு பதக்கம் மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.