கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜில் (முகட்டில்) பல் கனிம சல்பைடுகளை (PMS) ஆராய்வதற்காக சர்வதேச கடல்படுக்கை ஆணையத்துடன் (ISA) இந்தியா 15 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது ISA உடனான இந்தியாவின் மூன்றாவது ஆய்வு ஒப்பந்தமாகும் என்பதோடு மேலும் PMS ஆய்விற்கான இரண்டாவது ஒப்பந்தமாகும்.
அரேபியக் கடலில் அமைந்துள்ள கார்ல்ஸ்பெர்க் முகடு 3,00,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
இது இந்திய மற்றும் அரேபிய கண்டத் தட்டுகளுக்கு இடையில் ஒரு கண்டத் தட்டு (டெக்டோனிக்) எல்லையை உருவாக்குகிறது மற்றும் ஓவன் பிளவு மண்டலம் வரையில் நீண்டுள்ளது.
கார்ல்ஸ்பெர்க் முகட்டில் PMS ஆய்வுக்காக வழங்கப்பட்ட முதல் உலகளாவிய உரிமம் இதுவாகும்.
PMS என்பது நீர்வெப்ப நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட செம்பு, துத்தநாகம், தங்கம் மற்றும் வெள்ளி நிறைந்த கடல் தள கனிம இருப்புகளாகும்.