இந்தியா முழுவதும் உள்நாட்டு குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளை விரைவுபடுத்துவதற்கான ஊக்குவிப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு, நகர எரிவாயு விநியோக (CGD) நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கான PNG இணைப்புகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 1.74 கோடி அளவிலான உள்நாட்டு PNG இணைப்புகள் உள்ளன.
தகுதியான CGD நிறுவனங்கள், பகுதி சார்ந்த வரம்பிற்கு மேல் வழங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கட்டண இணைப்பிற்கும் குறைந்த விலையிலான உள்நாட்டில் நிர்வகிக்கப் படும் விலை முறை (APM) எரிவாயுவில் கூடுதலாக 200 தரநிலை கன மீட்டர்களை (SCM) பெறும்.
இத்திட்டம் இரண்டு கட்டங்களாக தலா ஆறு மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் என்பதோடு மேலும் PNG இணைப்புகளுக்கான முதலீட்டை திரும்பப் பெறும் காலத்தை சுமார் 10 ஆண்டுகளில் இருந்து சுமார் 3 ஆண்டுகளாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தேசிய PNG திட்டம் 2.0, விரைவான ஒப்புதல்கள், தரப்படுத்தப்பட்ட வழி உரிமை (RoW) கட்டணங்கள் மற்றும் புதிய PNG இணைப்புகளுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் ஆகியவை பிற நடவடிக்கைகளில் அடங்கும்.