2012 ஆம் ஆண்டின் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திருத்தங்களானது குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்குத் தண்டனையை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த திருத்தங்களானது குழந்தைகள் மீதான மோசமான உடல் ரீதியாக ஊடுருவும் தன்மை கொண்ட பாலியல் வன்கொடுமை தாக்குதல்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிப்பதற்கான வாய்ப்புகளை அளிக்கிறது.
பிரிவு எண் 9-ன் திருத்தமானது பேரிடர் மற்றும் இயற்கைப் பேரழிவு காலங்களிலும் குழந்தைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது.