PoS இயந்திரப் பயன்பாட்டில் 2வது மிகப்பெரிய வங்கி – ஆக்சிஸ் வங்கி
January 1 , 2022 1336 days 773 0
இந்த ஆண்டில் 2 லட்சத்திற்கும் அதிகமான அளவில் பண அட்டையினைத் தேய்க்கும் இயந்திரங்களை நிறுவியதன் மூலம் நாட்டின் 2வது மிகப்பெரிய வணிகம் செய்யும் வங்கியாக ஆக்சிஸ் வங்கி மாறியுள்ளது.
இது ஆக்சிஸ் வங்கியின் ‘ஆக்சிஸ் ஒன்‘ எனும் உத்தியின் ஓர் அங்கமாகும்.
இந்த உத்தியில், வாடிக்கையாளர்களுக்கு சில தனிப்பட்டச் சேவைகளை வழங்கச் செய்வதற்குப் பதிலாக தனது முழு அளவிலான சேவையையும் வழங்குவதன் மூலம் இந்த வங்கி வாடிக்கையாளர்களை சிறந்த முறையில்அணுகுகிறது.
இதில் HDFC வங்கி முதலிடத்திலும், ஆக்சிஸ் வங்கியினை அடுத்து SBI மற்றும் ICICI போன்ற வங்கிகளும் உள்ளன.