POSHAN அபியான் திட்டத்தில் முக அடையாளம் காணும் வசதி
July 7 , 2025 153 days 126 0
POSHAN அபியான் (தேசிய ஊட்டச் சத்துத் திட்டம்) கீழ் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கு 2025 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் முக அடையாளம் காணுதல் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முக அடையாளம் காணல் வசதியினைத் தவிர்ப்பதற்கான விருப்பத் தேர்வினை நீக்கப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (MoWCD) POSHAN டிராக்கர் என்ற செயலியைப் புதுப்பித்துள்ளது.
உயிரியல் அளவியல் பதிவுகளின் சரிபார்ப்புக்காக என புதிய பதிப்பைப் பயன்படுத்த அங்கன்வாடி பணியாளர்கள் செயலியை மீண்டும் பதிவிறக்கி நிறுவ வேண்டும்.
ஒருங்கிணைந்தக் குழந்தை மேம்பாட்டு சேவைகளின் (ICDS) கீழ் 6 முதல் 36 மாத வயது உடைய குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பலனளிப்பதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
உயிரியல் அளவியல் பதிவுகளின் சோதனைகளின் போது தாங்கள் தான் பதிவு செய்யப் பட்ட உண்மையான நபர்கள் என்பதை நிரூபிக்க 3 முதல் 6 வயதுடைய குழந்தைகளும் 'liveliness detection’ எனப்படுகின்ற உயிரியல் அளவியல் பதிவுகளின் மீது சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.