PRABHAAV தகவல் அறிக்கை மற்றும் பாரத் புத்தொழில் நிறுவனங்கள் சவால்
January 21 , 2025 234 days 203 0
PRABHAAV தகவல் அறிக்கை (தொலைநோக்குடையப் புத்தொழில் நிறுவனங்களின் பெரு முன்னேற்றத்திற்காக ஒரு நெகிழ்திறன் மிக்க மற்றும் துடிப்பான பாரதத்தினை மேம்படுத்துதல்) சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது இந்தியாவின் செழிப்பான புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பு மற்றும் 2016 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான அவற்றின் வளர்ச்சிக்கான முழுமையான வழிகாட்டியாகும்.
PRABHAAV ஒவ்வொரு பிராந்தியத்தின் சாதனைகளையும் பதிவு செய்கிறது.
பாரத் புத்தொழில் நிறுவனங்கள் சவால் ஆனது பல்வேறு துறைகளில் 75 சவால்களை தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சவாலில், சுமார் 20 தொழில் துறை முன்னணி நிறுவனங்கள் மற்றும் புதுமை படைப்பாளர்கள் வணிக சவால்களை எதிர்கொள்வதற்காக சிந்தனையாளர்களுக்கு சவால் விடுக்கின்றனர்.