ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் வருமான வரிச் சட்டம் 2025-ஐ மக்கள் புரிந்து கொள்ள உதவும் வகையில் இந்திய அரசு 'PRARAMBH 2026' என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
PRARAMBH என்பது விக்ஸித் பாரத் இயக்கத்திற்கான கொள்கைச் சீர்திருத்தம் மற்றும் பொறுப்பான நடவடிக்கை என்பதைக் குறிக்கிறது என்பதோடுஇது நாடு தழுவிய ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரமாகும்.
இது நிதி அமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் நடத்தப்படுகிறது.
வரி செலுத்துவோருக்கு புதிய வரி விதிகளைக் கற்பிப்பதும், வரித் தாக்கல் செய்வதை எளிமையாகவும் தெளிவாகவும் மாற்றுவதும் இதன் நோக்கமாகும்.
இதில் 'வருமான வரி இணையதளம் 2.0' மற்றும் கர் சாதி என்ற AI சாட்பாட் போன்ற டிஜிட்டல் கருவிகள் மக்களுக்கு உதவ இடம்பெற்றுள்ளன.