TNPSC Thervupettagam
September 6 , 2025 7 days 47 0
  • PRATUSH என்பது ஹைட்ரஜனில் இருந்து வரும் சமிஞ்ஞைகளைப் பயன்படுத்திப் பேரண்டத்தின் மறு அயனியாக்கத்தினை ஆராய்வது என்பதைக் குறிக்கிறது.
  • இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்பட்ட இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட எதிர்கால விண்வெளிக் கதிர் வீச்சுமானி ஆய்வுப் பணியாகும்.
  • முதல் நட்சத்திரங்கள் மற்றும் அண்டங்கள் உருவான சகாப்தமான காஸ்மிக் டான் எனப்படும் பேரண்டத்தின் ஆரம்பக் காலத்தினை ஆய்வு செய்வதே இந்த பணியின் நோக்கமாகும்.
  • பூமியின் கதிர்வீச்சு குறுக்கீடுகள் மற்றும் அயனி மண்டலக் குறுக்கீட்டைத் தவிர்ப்பதற்காக, PRATUSH நிலவின் சுற்றுப்பாதையில், குறிப்பாக நிலவின் தொலை தூரத்தில் செயல்படும்.
  • இந்த அமைப்பானது, ஒரு சிறிய முழு கட்டமைப்பினைக் கொண்ட ஒற்றைக் கட்டமைப்புக் கணினியை (SBC) பயன்படுத்தி வானலை வாங்கியைக் (ஆண்டெனா) கட்டுப்படுத்தி, FPGA (Field Programmable Gate Array) சிப் மூலம் தரவைச் செயலாக்குகிறது.
  • சோதனைகள் ஆனது கதிர் வீச்சுமானி மிகக் குறைந்த இடையூறினை  (சத்தத்தை) கண்டறிந்து அதன் உணர்திறனை நிரூபிக்கிறது என்பதைக் காட்டுகின்றன.
  • SBC தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது எடை மற்றும் சக்தியைக் குறைத்து, விண்வெளிப் பயன்பாட்டிற்கு இந்தப் பணியை சாத்தியமானதாக்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்