President’s Colour விருது – இந்தியக் கடற்படை விமானப் போக்குவரத்துப் பிரிவு
September 6 , 2021 1471 days 608 0
இந்தியக் குடியரசுத் தலைவர், கோவா மாநிலத்தில் INS ஹன்சாவில் நடைபெற உள்ள அரசு முறை அணிவகுப்பில் இந்தியக் கடற்படை விமானப் போக்குவரத்துப் பிரிவிற்கு President Colour என்ற விருதினை வழங்க உள்ளார்.
இது நாட்டிற்கு இராணுவப் பிரிவுகள் ஆற்றும் மகத்தான சேவைக்கான ஒரு அங்கீகாரமாக வழங்கப்படும் ஒரு உயரிய கௌரவ விருதாகும்.
President’s Colour விருதினைப் பெற்ற முதல் இந்திய ஆயுதப்படை இந்தியக் கடற்படை ஆகும்.
இது முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்களால் 1951 ஆம் ஆண்டு மே 27 அன்று வழங்கப்பட்டது.