TNPSC Thervupettagam

Project Vault திட்டம்

February 10 , 2026 5 days 48 0
  • அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், முக்கியமான கனிமங்களின் மூலோபாய இருப்பை உருவாக்குவதற்கான 12 பில்லியன் டாலர் முன்முயற்சியான Project Vault திட்டத்தை அறிவித்தார்.
  • இது முக்கியமான கனிமங்கள் மற்றும் அருமண் கூறுகளை வாங்கி சேமிப்பதற்கான ஒரு பொது-தனியார் கூட்டாண்மை ஆகும்.
  • இந்தத் திட்டத்தில் 1.67 பில்லியன் டாலர் தனியார் நிதியுதவியும், அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 10 பில்லியன் டாலர் வரையிலான ஆதரவும் அடங்கும்.
  • இத்திட்டத்தில் உள்ளடங்கிய கனிமங்களில் கோபால்ட், லித்தியம், காலியம் மற்றும் மின்கலன்கள், குறைக்கடத்திகள், பாதுகாப்பு மின்னணுவியல் மற்றும் ஜெட் என்ஜின்களில் பயன்படுத்தப்படும் அருமண் கூறுகளும் அடங்கும்.
  • கனிம விநியோகச் சங்கிலிகளுக்காக வேண்டி சீனா மீதான அமெரிக்காவின் சார்பு நிலையைக் குறைப்பதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்