இந்திய எஃகு ஆணைய நிறுவனமானது (ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்-SAIL) இந்திய மக்கள் தொடர்பு சங்கத்திலிருந்து (PRSI) எட்டு தேசிய விருதுகளை வென்றது.
டேராடூனில் நடைபெற்ற 47வது அகில இந்திய மக்கள் தொடர்பு மாநாட்டில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
விளம்பரம், மக்கள் தொடர்பு, டிஜிட்டல் தொடர்பு மற்றும் நிகழ்வு மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்காக வேண்டி SAIL நிறுவனத்திற்கு விருது வழங்கி அங்கீகரிக்கப் பட்டது.
செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி சிறப்பான விளம்பரப் பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்புகளில் செயற்கை நுண்ணறிவின் சிறப்பானப் பயன்பாடு ஆகியவை இந்த நிறுவனம் பெற்ற விருதுகளில் அடங்கும்.