மேம்படுத்தப் பட்ட EOS-09 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவதற்காக என்று விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் PSLV-C61 திட்டம் சமீபத்தில் தோல்வியடைந்தது.
PS3 கலம் ஏவப்படும் போது விசையியக்கியினுடைய திடநிலைக் கட்டத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன.
PS3 கட்டத்தில் ஹைட்ராக்சில் பிணைப்பு முறிக்கப்பட்டப் பாலிபியூட்டாடையீன் (HTPB) எரிபொருள் பயன்படுத்தப்பட்டது.
EOS-09 செயற்கைக்கோள் ஆனது, C-கற்றை சிந்தெட்டிக் அப்பெர்சர் என்ற ரேடாரைப் பயன்படுத்தி அனைத்து வானிலை கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்டது.
அதன் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட சுமார் 525 கிலோ மீட்டர் தொலைவிலான சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையை அது அடையத் தவறியது.
இது PSLV ஏவுகலத்தின் 63 ஏவுதல்களில் அதன் மூன்றாவது தோல்வியையும் 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான முதல் ஏவுகலத் தோல்வியையும் குறிக்கிறது.