TNPSC Thervupettagam

PSTM இடஒதுக்கீடு சட்டத் திருத்தம்

August 29 , 2026 15 days 133 0
  • கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் வழியில் பயின்றோருக்கான (PSTM) இடஒதுக்கீட்டின் கீழ் செய்யப் பட்ட அரசுப் பணி நியமனங்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டத் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
  • 20% PSTM முன்னுரிமையைக் கோரிய 84 அரசுப் பணியாளர்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 2025 ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • 2010 ஆம் ஆண்டுச் சட்டம், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் காலியிடங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்குகிறது.
  • 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட PSTM அறிவிப்புகள், தேர்வுகள் மற்றும் நியமனங்களை இந்தத் திருத்தம் செல்லுபடியாக்குவதோடு, தொடர்புடைய தொடர் நடவடிக்கைகளையும் பாதுகாக்கிறது.
  • எதிர்காலத்தில், PSTM முன்னுரிமையை ஏற்கனவே பயன்படுத்தியவர்கள், அதிக ஊதியம் பெறும் பதவிகளுக்கு மட்டுமே அதை மீண்டும் பயன்படுத்த முடியும்.
  • ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இந்த மசோதாவிற்கு 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று ஒப்புதல் அளித்தார், அதன் பிறகு இது தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்