TNPSC Thervupettagam
October 25 , 2025 11 days 47 0
  • நாசாவின் PUNCH திட்டம் (2025) சூரியக் காற்றின் இயக்கவியலை வெளிப்படுத்தியது.
  • கரோனா அடுக்கு மற்றும் அயனிச் செறிவு மண்டலத்தினை ஒன்றிணைக்கும் துருவமானி என்பதைக் (Polarimeter to Unify the Corona and Heliosphere) குறிக்கிறது.
  • இது சூரியக் கரோனா மற்றும் சூரியக் காற்றை ஒற்றை, இணைக்கப்பட்ட அமைப்பாக ஆய்வு செய்கிறது.
  • இந்தத் திட்டம் சூரியக் காற்றின் விரிவான படங்களைப் பிடிக்கிறது என்பதோடு, இதனால் கண்ணுக்குத் தெரியாத நிகழ்வுகள் புலப்படும்.
  • சூரியக் காற்று சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்திலிருந்து வெளிப்படும் மின்னூட்டப் பட்ட துகள்களைக் கொண்டுள்ளது.
  • அதிக சூரியச் செயல்பாட்டின் ஒரு கட்டமான தற்போதைய அதிகபட்ச சூரியச் செயல்பாட்டின் போது PUNCH செயல்படுகிறது.
  • இந்தக் கட்டத்தில் அதிகரித்த சூரியக் கரும்புள்ளிகள், சூரியச் சுடர்கள் மற்றும் சூரிய வெப்ப உமிழ்வுகள் ஆகியவை அடங்கும்.
  • விண்வெளி வானிலை மற்றும் பூமியில் அதன் விளைவுகள் பற்றிய முன்னறிவிப்பை மேம்படுத்த இந்த திட்டம் உதவுகிறது.
  • சூரியப் புயல்கள் செயற்கைக்கோள்கள், புவியிடங்காட்டிச் செயல்பாடுகள், மின் கட்டமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளைச் சீர்குலைக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்