TNPSC Thervupettagam
May 30 , 2026 13 hrs 0 min 20 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) Q-SAFE (குவாண்டம் பாதுகாப்பான மற்றும் தகவமைவுடைய நிதிச் சூழலமைப்பு) எனப்படும் 8 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. 
  • இந்தியாவின் வங்கி மற்றும் நிதி அமைப்பில் குவாண்டம் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து இக்குழு ஆய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். 
  • குவாண்டம் கணினியால் இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் தற்போதுள்ள மறைகுறியிடப்பட்ட அமைப்புகளுக்கு ஏற்படும் அபாயங்களை இது ஆராயும்.
  • குவாண்டம் - பாதுகாப்பான மறைகுறியாக்கத்தை பின்பற்றுவதற்கும் மற்றும் நிதி அமைப்பின் பின்னடைவுத் திறனை மேம்படுத்துவதற்கும் ஒரு வழிகாட்டுதல் வரைபடத்தை இக்குழு பரிந்துரைக்கும். 
  • சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் அனில் பிரபாகர் தலைமையிலான இக்குழுவில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) ஆகியவற்றின் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்